Categories
உலக செய்திகள்

இலங்கை: 3 கப்பல்களில் பெட்ரோல், டீசல் அனுப்ப முடிவு…. இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் கம்பெனி அறிவிப்பு….!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கம்பெனி இலங்கைக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளது.

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்து விட்டது. இதில் குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகள் உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் இந்தியன் கார்ப்பரேஷன் ஆயில் கம்பெனி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசலை கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்தியன் ஆயில் கம்பெனி முடிவு செய்துள்ளது. இந்த எரிபொருளை ஏற்றி செல்லும் முதல் கப்பல் வருகிற 13-ஆம் தேதி கொழும்பை சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கப்பல் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பப்படுவதால் தற்சமயத்திற்கு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |