தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக நிரந்தர பொது செயலாளருமான ஜெ ஜெயலலிதா மறைவிற்குப்பின் அக்கட்சியில் இரட்டை தலைமை உருவானது. ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இணைய ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி போன்றோர் பொறுப்பேற்றுள்ளனர். நான்கு வருடங்கள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதற்கிடையே கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்திய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் வரும் 11ம் தேதி ஒற்றை தலைமை தீர்மானத்தோடு அதிமுக பொதுக்குழு கூட்டம் மீண்டும் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இந்த நிலையில் வருகிற 11-ம் தேதி பொதுக்குழுவை கூட்டி மீண்டும் பொது செயலாளர் பதவியை கொண்டு வந்து அதனை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருக்கிறார். அத்துடன் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சி.வி சண்முகம் அறிவித்திருந்த நிலையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலமாக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகரித்து வருகின்ற காரணத்தால் ஆன்லைன் முறையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த பரிசீலனை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வாயிலாக கூட்டத்தை நடத்தலாமா என்பது பற்றி தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.