Categories
மாநில செய்திகள்

விஜயின் தந்தை பிறந்த நாளை முன்னிட்டு… ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?…. நெகிழ வைத்த சம்பவம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜயின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பிரச்சினை நிலவிவரும் நிலையில் வாழ்த்தியதும் நடிகர் விஜய் சொன்னாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள முதியோர் அனுமதி இல்லத்தில் காலை உணவு வழங்கினர். இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் மாவட்ட திருச்சி விஜய் மக்கள் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மும்பை பவுல், புத்தூர் பிரகாஷ், உறையூர் சரண்ராஜ், காஜாமலை சுப்பிரமணி, மலைக்கோட்டை நசீர், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு, சந்தோஷ் குட்டி ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |