பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து கோவை, மதுரை பழனி, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கு முன் ரயில்கள் வரும் நேரங்களில் மார்க்கெட்டில் இயக்கப்படும் பஸ்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ரயில் நிலையத்திற்கு வசதிகள் இல்லை. அதாவது மார்க்கெட் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றன. இதற்கிடையில் அமாவாசை நாட்களில் பஸ் நிறுத்ததில்லை கூட்டமாக சென்று பஸ் ஏற வேண்டியது உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் ரயிலுக்கு காலை நேரத்திலும், திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும்போது இரவு நேரத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதனைப் போல மாசாணி அம்மன் கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் மதுரையில் இருந்து வரும் ரயிலில் ஏராளமான பயணிகள் வருகின்றனர். வயதானவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து மார்க்கெட் ரோடு வந்து பஸ் ஏறுவதற்கு சிரமப்படுகின்றன. எனவே மார்க்கெட் ரோட்டில் செல்லும் பேருந்துகளை திருச்செந்தூர் ரயில் வரும் போது பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை போல அமாவாசை நாட்களில் ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கும் அதிகாரிகள் மதுரை ரயில் வரும் நேரத்தை பொருத்து பஸ்களை ரயில் நிலையம் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே அரசு போக்குவரத்து கழகம் அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.