Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 3 மாதம் இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் நிதி உதவிகளை பெற முடியும். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள சுமார் 15 கோடி மக்களுக்கு மிகப்பெரிய பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இலவச ரேஷன் திட்டத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. பொதுமக்களுக்கு அந்தியோதயா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வழங்குவதாக யோகி அரசு அறிவித்திருந்தது.இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது கோதுமை, அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் உப்பு உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். மாநில அரசின் இந்த திட்டத்தை தவிர உத்திரப்பிரதேசத்தில் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூலை நான்காம் தேதி யோக்கிய ஆதித்யநாத் அரசை இரண்டாவது பதவிக்காலத்தில் 100 நாட்களை நிறைவு செய்கின்றது. இதை அடுத்து இலவச ரேஷன் திட்டத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 கோடி மக்கள் பயனடைவார்கள். இந்த அறிவிப்பு உத்திரபிரதேச மாநில மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |