கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் மொடச்சூரில் உழவர் சந்தை உள்ள நிலையில் இங்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், உள்ளிட்டவற்றை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவார்கள்.
இந்நிலையில் சென்ற ஜூன் மாதத்தில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 847 விவசாயிகள் 2,90,202 காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தார்கள். இந்த காய்கறிகள் மொத்தம் 78 லட்சத்து 81 ஆயிரத்து 995க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தைக்கு மொத்தம் 32,238 நுகர்வோர்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர்.