விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு சாதாரண பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு சாதாரண பயணிகள் ரயிலுக்கு பதிலாக தினசரி விரைவு ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலை ரயில் நிலைய அதிகாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து இன்று முதல் மாலை 5:20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதனைப் போல 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் விரைவு ரயில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.