Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு திடீர் அவசர அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் லடாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 முதல் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிலும் குறிப்பாக குழந்தைகளிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கையாக லடாக் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றது. மேலும் காஷ்மீர் பிரிவு மற்றும் ஜம்மு பிரிவின் குளிர்கால மண்டலத்தின் செயல்படும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள்,மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஜூலை 4 முதல் கோடைகால விடுமுறையை கடைபிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |