திடீரென பரவிய காட்டுத் தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் சண்ட் அண்டொனி டி கலான்ங் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு ஹோட்டலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அப்பகுதியில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 70 ஹெக்டேர் பரப்பிலான நிலப்பரப்புகள் சேதமடைந்துள்ளது. மேலும் காட்டுத்தீ காரணமாக அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.