Categories
தேசிய செய்திகள்

வங்கியில் லோன் வாங்க போறீங்களா?…. இதெல்லாம் இல்லாவிட்டால் கடன் கிடைக்காது….!!!!

இன்றைய காலகட்டத்தில் பணத்தேவை இருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் நாம் அனைவரும் வங்கியில் கடன் வாங்குகிறோம். அதன்படி வங்கிகளில் கடன் வாங்குவது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. உங்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் எளிதில் வங்கி கடன் பெற முடியும். இருந்தாலும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடு இருந்தால் உங்களுக்கு கடன் வழங்க வங்கிகள் மறுத்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வங்கிகள் கடனை வழங்குவதற்கு முன்பாக, கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார், அவரால் கடனை எவ்வாறு திருப்பி செலுத்த முடியும் என்பதை அந்த வங்கிகள் சரிபார்க்கின்றன.

அதன் பிறகு தான் ஒரு நபருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. நாம் எவ்வளவு தொகையை கடனாக கேட்டாலும் நமக்கு எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என்பதை வங்கிகள்தான் முடிவு செய்கின்றன. அது மட்டுமல்லாமல் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வங்கியில் சமர்ப்பித்தால் மட்டுமே கடனை வங்கிகள் வழங்குகின்றன.இந்த ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அந்த வங்கி உங்களுக்கு கடன் வழங்க மறுப்பு தெரிவிக்கலாம். எனவே ஆவணங்கள் மட்டும் சிபில் ஸ்கோர் என்பது வங்கி கடன் பெறுவதற்கு மிகவும் முக்கியமான ஒன்று.

சம்பளம் வாங்குபவர்களுக்கான தனிநபர் கடனுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன?

அடையாளச் சான்று
குடியிருப்புச் சான்று.
சம்பளம் எடுக்கப்பட்ட வங்கிக் கணக்கின் கடைசி மூன்று மாதங்களின் வங்கி விவரங்கள்
கடந்த மூன்று மாத சம்பள சீட்டு
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு

கார் கடன் பெற தேவையான ஆவணங்கள்?

அடையாளச் சான்று
இருப்பிடச் சான்று
பயன்பாட்டு பில்
வயது சான்று
சம்பள விவரம்
மூன்று முதல் ஆறு மாதங்கள் வங்கி அறிக்கை.
கையொப்ப சரிபார்ப்பு சான்று மற்றும் ப்ரோஃபர்மா இன்வாய்ஸ்

Categories

Tech |