நாமக்கலை சேர்ந்த காந்தியவாதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்க போவதாகவும், அதற்கு செலவுக்கு 4809 கோடி கடன் வேண்டும் என்று சென்னை ரிசர்வ் வங்கியில் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த காந்தியவாதி ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு 4,809 கோடி கடன் கேட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் காந்தியவாதி ரமேஷ் என்னும் இந்திய குடிமகனான நான் கடந்த 15.06.2022 அன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாக 16ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க குறைந்த பட்சம் 2405 வாக்குகள் தேவைப்படுகின்றன. இந்த வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு தலா 1 கோடி வீதம் அன்பளிப்பு வழங்க வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் பாரபட்சமில்லாமல் தலா 1 கோடி வீதம் அன்பளிப்பாக வழங்கி வாக்குகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உள்ளேன். எனவே எனக்கு உடனடியாக ரூ.4,809 கோடியை நமது சென்னை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மானிய கடனாகவோ, தள்ளுபடி கடனாக வழங்க வேண்டுமென மனு அளித்துள்ளார். இந்த கடனுக்காக ஜனாதிபதியாக இருக்கும் 5 ஆண்டுகளுக்கும் ஊதியமாக வழங்கும் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.