விஜய் தேவர் கொண்ட நடிக்கும் லிகர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் தேவர் கொண்டா. இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவர் கொண்டா தற்போது நடித்து வரும் படம் லிகர் முன்னணி இயக்குனரான பூரி ஜெகநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன் ரோனிட் ராய், விசு ரெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
குத்துச்சண்டை வீரராக விஜய் தேவர் கொண்ட நடித்துள்ள இந்த படம் விளையாட்டையும் காதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இன்று வெளியாகி உள்ளது. இதில் விஜய் தேவர் கொண்ட ஆடை இல்லாமல் கையில் பூங்கத்துடன் இருக்கிறார். இது குறித்து அவர் இப்படத்திற்காக நான் உடலளவிலும் மனதளவிலும் அனைத்தையும் தந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.