Categories
உலக செய்திகள்

“காற்றில் பறந்து வரும் பலூன்” வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணம்….. பிரபல நாட்டில் திடீர் எச்சரிக்கை…!!

பிரபல நாட்டில் காற்றில் பறந்து வரும் பொருட்களால் வைரஸ் தொற்று பரவுவதாக கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்று தற்போது குறைந்ததால் மீண்டும் இயல்பு நிலைக்கு பல்வேறு நாடுகள் திரும்பியது. ஆனால் மீண்டும்  உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் வடகொரியா மற்றும் தென்கொரியாவிலும் பரவி வருகிறது. இந்த 2 நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருக்கிறது. இந்நிலையில் வடகொரியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.

இதனைடுத்து வடகொரியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் தென்கொரியாவில் இருந்து காற்றில் வரும் பொருள்கள் தான் என்று அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக அந்நிய நாட்டில் இருந்து பறந்து வரும் பொருட்கள் மற்றும் பலுன்களை மக்கள் யாரும் தொட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு காற்றின் மூலமும் வைரஸ் பரவலாம் எனவும் வடகொரிய நாட்டில் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு தென்கொரியாவில் ஒருங்கிணைப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் எல்லை வழியாக அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் காற்றில் பறந்து வரும் பொருட்கள் மூலம் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும்.

எனவே வடகொரியா கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்று கூறியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இருந்த வர்த்தக தடை நீக்கப்பட்டு மீண்டும் சரக்கு ரயில் சேவைகள் சீனாவுக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் வடகொரியா நாட்டிற்கு வைரஸ் வேகமாக பரவுகிறது என்று கூறப்படுகிறது‌. ஆனால் வடகொரியா சீனாவின் மீது குற்றம் சுமத்தினால் மீண்டும் வர்த்தக உறவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் சீனா மீது குற்றம் சாட்டாமல் மறைமுகமாக தென்கொரியா மீது குற்றம் சுமத்துகிறது.

Categories

Tech |