சமீப காலமாகவே மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புதிய புதிய யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். அதன்படி பொதுமக்களுடைய செல்போன் எண்ணுக்கு தங்களுடைய வீட்டில் மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாதம் மின் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின் அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்போன் நம்பரோடு சேர்த்து குறுந்தகவலை அனுப்புகின்றனர்.
இந்நிலையில் மின்கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை என அனுப்பப்படும் போலி தகவலை நம்பி தமிழக பொது மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தனர் போன்று பேசி வங்கி கணக்கு விவரங்களை பெற்று மோசடி செய்பவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போனில் தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியத்திடமிருந்து குறுஞ்செய்தியோ போன் அழைப்போ வராது என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.