முதியவரை கொலை செய்த கணவன், மனைவிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் தாமரைச்செல்வன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கனகராஜ்(44), அவரது மனைவி தனசெல்வி(34) ஆகிய இரண்டு பேரும் இணைந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து கனகராஜ் மற்றும் தனசெல்வி இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கணவன் மனைவி இரண்டு பேருக்கும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.