பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய நகர் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேவதியின் தந்தை இறந்து விட்டதால் அவர் புதுக்கோட்டையில் உள்ள தனது தந்தை வீட்டிலிருந்து தனது மகன்களுக்கு உணவு எடுத்துச் சென்று வருகிறார்.
இந்நிலையில் ரேவதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து ரேவதி சாயர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஐயப்பனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 7 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்