மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கடந்த ஜூன் 13-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஜூன் 13-ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிகளை தூய்மைப்படுத்துமாறு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பாக கடைசியாக 2 சுற்றறிக்கைகளை வெளியிட்டார். அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி அரசு உதவி பள்ளிகளில் நடப்பாண்டு முதல் மகிழ்ச்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வில் நாட்டை காப்பதற்காக வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் கூறினார்.