தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.