Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சாலைகளில் அதிகரித்துள்ள வனவிலங்குகள் நடமாட்டம்”…. சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை…!!!!

வனவிலங்கு நடமாடும் அதிகரித்து இருப்பதால் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை என அறிவுரை கூறியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் புலிகள் காப்பகம் இருக்கின்ற நிலையில் சில மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கத்தால் வறட்சியாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் இடம்பெயர்ந்தது. இதனால் யானைகள் ஊருக்குள் வர தொடங்கியது.

இதனிடையே கோடை மாதத்தில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பசுமையாக இருக்கின்றது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை, முதுமலை- மசினகுடி சாலையோரத்தில் விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்ததையடுத்துச் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். இதனால் வனத்துறையினர், வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |