Categories
தேசிய செய்திகள்

“இனி சம்பளம் குறையும்” இன்று முதல் புதிய விதிமுறை அமல்…. தனியார் ஊழியர்கள் ஷாக்….!!!!!

மத்திய அரசு உத்தரவின்படி வருகின்ற ஜூலை மாதம் முதல் புதிய ஊதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.இந்த விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய பட்டியலை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும். அதனால் ஊழியர்களின் சம்பளம் குறைய கூடும்.

இந்த புதிய ஊதிய விதிகளின்படி ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் கட்டாயம் இருக்கக் கூடாது. மேலும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த அடிப்படை சம்பளம் அதிகரிப்பதன் மூலம் கிராஜுவிட்டி அளவும் அதிகரிக்கும். பிஎஃப் பங்களிப்பும் இனி அதிகரிக்கக்கூடும்.

இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் சேமிப்பை அதிகரிக்கும் என்பதால் ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த புதிய விதிமுறைகளின் படி ஜூலை மாதத்திற்கு பின்னர் ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கக்கூடிய சம்பளம் குறைந்தாலும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு பெரிய தொகை கிடைக்கக்கூடும். இருந்தாலும் கையில் வாங்களும் மாத சம்பளம் குறைந்தால் நெருக்கடி ஏற்படும் என்று ஒரு தரப்பினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |