Categories
மாநில செய்திகள்

BSNL வாடிக்கையாளர்களே…. 30 நாள் வேலிடிட்யுடன் 2 புதிய திட்டங்கள்…. முழு விவரம் இதோ….!!!!!!!!

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஜூலை 1, 2002 முதல் இரண்டு புதிய திட்டங்களையும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் பிஎஸ்என்எல் புதிய இரண்டு பிரீபெய்டு திட்டங்களில் விலை முறையே ரூ.228,ரூ.239 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரு மாத வேலிடியுடன் வருவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு தினசரி டேட்டா போன்ற பல நன்மைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. வேறு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்காத பல சலுகைகள் புதிய பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் திட்டங்களை பற்றிய கூடுதல் விவரங்களை காண்போம்.

இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புக்களை பெறுகின்றார்கள். மேலும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா பயனர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த டேட்டா தீர்ந்துவிட்டால் வேகம் 80 kbps ஆக குறையும். மேலும் இந்தத் திட்டத்தில் தினமும் நூறு எஸ்எம்எஸ் பலன்களும் இருக்கின்றது. பிஎஸ்என்எல் இன் இந்த ரீசார்ஜ் Progressive Web பயன்பாட்டில் சேலஞ்ச் அரீனா (Challenge Arena) மொபைல் கேமிங் சேவைக்கான சந்தாவையும் வழங்குகிறது.

ரூ.239 பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டமானது ரூபாய் பத்து டாக்டைமே வழங்குகின்றது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். மேலும் கூடுதலாக இதில் இரண்டு ஜிபி டேட்டாவும் சந்தாதாரர்களுக்கு கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் களையும் பெறுகின்றார்கள் கேமிங் பலன்களை இந்த திட்டத்திலும் நிறுவனம் சேர்த்திருக்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்டபடி 228, 239 ஆகிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு திட்டங்கள் ஒரு மாத செல்லுபடியாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது 1 ம் தேதி திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அடுத்த மாதம் 1 ம் தேதி வரை நீங்கள் எந்த தடங்கலும் இல்லாமல் மொபைல் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதே போல் 30 நாட்கள் வேலிடிட்டி இடம் வரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமானது கூடுதல் செலவு ஏற்படுத்தும் அதன் ரீசார்ஜ் திட்டங்களின் விலை பிஎஸ்என்எல் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.

Categories

Tech |