இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னான்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள twitter பதிவில் இந்திய தூதர் இன்று தொழில்துறை மந்திரி நலின் பெர்னான்டோவை சந்தித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை உயர்த்துவது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இரு தரப்பு வர்க்கத்தின் பல்வேறு அம்சங்களை பற்றி இருவரும் விவாதம் மேற்கொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories
இலங்கை வர்த்தக மந்திரியை சந்தித்த இந்திய தூதர்… பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதம்….!!!!!!!!!
