Categories
அரசியல் மாநில செய்திகள்

கடல்ல புடிச்சு தள்ளிடுவாரு…! நான் கோர்ட்டுக்கு போறேன்…  அதிமுகவுக்கு புது குடைச்சல்…!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி சிவி சண்முகம் யாரையாவது கடலில் பிடித்து தள்ளிவிடுவார் என்று கூறியிருக்கிறார். 

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த கடலோரமா போய் இடம் தேடுறாங்களாம். யாரும் சரியாக வரவில்லை என்றால் சிவி சண்முகம் யாரையாவது புடிச்சு கடல்ல போய் தள்ளிடுவாரு. கடல் பக்கத்துல இருக்கு, பாருங்க! ஈசியா இருக்கும். இங்க இருந்து ஈசிஆர்ல தேடிட்டு இருக்காரு, இதுதான் நடக்குது. ஆகவே என்னுடைய பொதுவான கருத்து…

மக்களுடைய நலன் கருதி,  இந்த கொரோனா இருக்கின்ற நேரத்தில் கூட்டம் போடுவது என்பது சட்டத்திற்கு புறம்பானது. நீங்களே பரப்பி விட்டுவிடுவீர்கள் ஆகவே இந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இல்ல கூட்டத்தை கூட்டினீங்கன்னா…. சிபி சண்முகம் என்ன பேசுறாரு ? திமுக அரசு கஞ்சா விற்பதில் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது. வேலுமணி கொலைகார  திமுக என்கிறாரு, இதுக்காகவா கூட்டத்தை கூட்ட சொல்றீங்க.

ஒரு பக்கம் கொரோனா பரவுது,  இன்னொரு பக்கம் கூட்டம் கூட்ட விட்ட உங்களையும் அவங்க திட்றாங்க, ரெண்டும் நடக்குது. ஆகவே கவர்மெண்ட் சரியான முடிவு எடுக்கணும்னு நினைக்கிறேன். இல்லையென்றால் நீதிமன்றம் போகின்றேன். அதுல கவலை இல்லை எனக்கு.

மறுபடியும் கூட்டத்தை கூட்ட விட்டால், அது தப்பு. இவ்வளவு பேருக்கு கொரோனா இருக்கு, இவுங்கள கண்டுபுடிக்கணும். எல்லா வீட்டுக்கும் ஆள் அனுப்பு. இவங்க ஆக்சன் எடுக்கவில்லை என்றால், வேறு வழி அல்ல. நான் தனிப்பட்ட நபரா நின்னுட்டு…  பொதுவா  இங்க இருக்குற நீங்களா இருக்கட்டும் கோர்ட்டுக்கு போக முடியும். இது அரசியலாவே பார்க்க வேண்டாம் என்று சொல்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |