Categories
உலக செய்திகள்

புனித எண்ணெய்… யார் தொடுகிறீர்களோ அவங்களுக்கு நோய் வராது… ஏமாந்து போன 20 பேர் பரிதாப மரணம்..!!

தான்சானியாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தான்சானியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் கிளிமாஞ்சாரோ பிராந்தியம் உள்ளது. இந்த பிராந்தியத்தில் தான் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம், வாம்போசா என்ற நபர் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தியபின், கையில் இருக்கும்  குடுவையில் புனித எண்ணெய் இருப்பதாக கூறிவிட்டு, அதனை தரையில் ஊற்றினார்.

Image result for At least 20 people were killed in a Christian prayer meeting in Tanzania."

பின்னர் அந்த எண்ணெய்யை யாரெல்லாம் தொடுகிறார்களோ அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகும் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை அப்படியே நம்பிய மக்கள் போட்டி போட்டுகொண்டு ஒருவரையொருவர் சண்டைபோட்டுக்கொண்டு அதை எப்படியாவது தொட வேண்டும் என்று முன்னே சென்றனர்.

Image result for At least 20 people were killed in a Christian prayer meeting in Tanzania."

அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கிய 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். அதன்பின் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்தவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்ததால் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. மூட நம்பிக்கையை நம்பியே மக்கள் தங்களது உயிரை இழந்து விட்டனர்.

Categories

Tech |