தென்னாப்பிரிக்காவில் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுன் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கம்மை பாதித்துள்ளது. இது குறித்து தென்னாபிரிக்கா சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை பரவுவதை தடுப்பது குறித்து பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை வழக்குகளை கண்டறிதல் மற்றும் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலின் போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் பல அடுக்குகளில் சோதனை செய்தனர்.
இதில் பயணிகளின் வெப்பநிலை பரிசோதித்தல், பயணிகளின் உடல்நிலை குறித்த கேள்விகளை தான் நிரப்புதல், அவற்றை பகுப்பாய்வு செய்தனர். இதன் மூலம் தொற்று பரவலை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க உதவியது. இதனையடுத்து சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப நோய் தொற்று பரவுவதை தொடர்ந்து கண்காணிக்க சுகாதாரத் துறை தேசிய தோற்று நோய்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. மேலும் சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், நோயை அறிகுறிகள் உள்ளதாக சந்தேகம் இருந்தால் மாதிரி எடுத்து பரிசோதனை செய்வார்கள். குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இதன் மூலம் விரைவான சிகிச்சை அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.