Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் CORONA: ஊரடங்கு கட்டுப்பாடு….? அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் திருச்சி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் கூடும் இடங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் முககவசம் அவசியம். மீறினால் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |