செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க ரெண்டு பேரும் அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே தகுதி இல்லாதவர்கள் மாதிரி தான் நடக்கிறார்கள். அதுதானே உண்மை…. பணம், காசு செலவு செய்து, ஒவ்வொருவரையும் மூன்று கோடி, நான்கு கோடி கொடுத்து விலைக்கு வாங்கி, கழக பதவிக்கு வருவதற்கான போட்டி நடக்கிறது, அதற்காக ஒருவர் அசுரர் மாதிரி ஆட்டம் போடுகிறார்..
இதெல்லாம் தொண்டர்கள் சாதாரணமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் சொல்கிறேன் இந்த இயக்கம் அழிவு பாதையை நோக்கி செல்கிறது. ஓபிஎஸ்_ஸை வாட்டர் பாட்டில் கொண்டு எறிந்தார்கள், அங்கு இருந்தவர்கள் வேறு எதைக் கொண்டு வேணாலும் அடித்திருப்பார்கள் என்று அவருக்கு தெரியும். ஆனால் திரு. வைத்தியலிங்கம், ஜே.டி.சி பிரபாகரன் இவரெல்லாம் நல்ல துணிச்சலா அங்க போயிட்டு, அது என்ன கூட்டம் என்று சொல்வது வார்த்தையே இல்லை….
அந்த அயோக்கியர்களின் கூட்டத்தின் நடுவிலே சென்று வந்ததே பெரிய விஷயம் தான். அதை நான் பாராட்டுகிறேன். இதுபோன்று இந்த இயக்கம் நடக்கிறது, பணத்திற்காக தான் இயங்கிக்கொண்டிருக்கிறது, பணத்தை அடிப்படையாக வைத்துதான் இயங்குகிறது, தொண்டர்களை வைத்து இயக்கவில்லை என்று தான் நான் இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தேன் என தெரிவித்தார்.