Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செத்து மிதக்கும் மீன்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை….!!

கண்மாயில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி பகுதியில் இருக்கும் கண்மாய்கள் முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடந்த ஆண்டு நெல்லில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கண்மாய் தண்ணீர் வற்றி மீன் பிடிக்க ஏதுவாக இருப்பதால் மீன்பிடித் திருவிழாவும் நடைபெறுகிறது. தற்போது பள்ளப்பட்டி பெரிய கண்மாயில் இருக்கும் விரால் மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே கண்மாய் நீரில் விஷம் கலந்துள்ளதா அல்லது மீன்கள் இறப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |