Categories
மாநில செய்திகள்

மீனா கணவர் இதனால் தான் இறந்தார்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்ற அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப் பிரபலங்கள் பலரும் இவரின் இறப்புக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகை மீனாவின் கணவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வித்யாசாகரை மருத்துவமனையில் பார்த்தேன். உடல் நிலை மோசமாக இருந்ததார். உடல் மாற்று அறுவை சிகிச்சைக்கு யாராவது தானம் செய்தால் காப்பாற்ற முடியும் என கூறப்பட்டது. இதற்காக இந்தியா முழுவதும் உடல் உறுப்புகள் தேடி கிடைக்கவில்லை. ரத்தவகை பொருந்தவில்லை. அவர் கொரோனாவால் இறக்கவில்லை. நுரையீரல் பாதிப்பு இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |