Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர சோதனையில் சுங்க இலாகா அதிகாரிகள்…. வசமாக சிக்கிய 14 பேர்…. பறிமுதல் செய்யப்பட்ட 1 1/2 கோடி …..!!!!!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுங்க இலாக அதிகாரிகள் மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தமுகமது அனிபா (வயது 32), தாய்லாந்தில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிக் (35), இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட 17 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 13 பேரின்   உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்து இருக்கின்றனர். மேலும் இவர்களிடமிருந்து ஒரு கோடியே 4 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 265 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த யாசர் என்பவரை சோதனை மேற்கொண்டதில் அவரிடமிருந்து 50 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 90 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கோடியே 54 லட்சம் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 14 பேரையும் கைது செய்து தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |