நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், டைரகடர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரகுமா, பாடகர் கிரிஷ், நடிகைகுஷ்பு,நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் நாசர், நடிகர் சரத்குமார், டான்ஸ் மாஸ்டர் கலா, காயத்ரி ரகுராம், அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி ஊர்வலம் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று உள்ளனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.