பிரபல நடிகருக்கு அண்மை பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
மலையாள சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விஜய் பாபு வலம் வருகிறார். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதுமுக நடிகை ஒருவர் கொச்சி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மற்றொரு பெண்ணும் விஜய் பாபு மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் பாபு கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று தலைமறைவாகி விட்டார்.
இதன் காரணமாக காவல்துறையினர் விஜய் பாபுவிடம் விசாரணை நடத்த முடியாமல் திணறினர். அதன்பிறகு விஜய் பாபுவுக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கபட்டதால், துபாயில் இருந்து விஜய் பாபு கேரளாவுக்கு திரும்பி வந்தார். இதனையடுத்து எர்ணாகுளம் காவல்நிலையத்தில் நடிகர் விஜய் பாபு விசாரணைக்கு ஆஜரானார். இவரிடம் வருகிற 3-ம் தேதி வரை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது தற்போது ஆண்மை பரிசோதனை செய்வதற்கு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த பரிசோதனை இன்று அல்லது நாளை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.