தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) நேற்றிரவு காலமானார். சென்ற 2009 ஆம் வருடம் வித்யாசாகரை, மீனா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சென்னை சைதாப் பேட்டையில் வித்யாசாகர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றுகாலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபு தேவா, சுந்தர்.சி மற்றும் நாசர் உட்பட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகை சினேகா நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்பின் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் சினேகா ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்.