Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு…. எப்போது ரிசல்ட்தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்…. !!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்க்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இதனையடுத்து பொது தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தியதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று பல தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4ம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10-ஆம் தேதியும் வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |