Categories
மாநில செய்திகள்

முதல் தென்னிந்திய நடிகர்…. தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்!…. முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்.!!

ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களை அழைப்பது வழக்கம்.. அதன்படி இந்த வருடம் கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டு இருக்கிறார்.. இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக இடம்பெற இருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகை சூர்யா.. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. அதேபோல பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவரும் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!” என்று தெரிவித்துள்ளார்..

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |