அனைவருக்கும் தங்களது எதிர்காலத்தை எண்ணி ஒரு அச்சம் இருக்க தான் செய்யும். தங்களுடைய கடைசி காலத்தில் பென்ஷன் என்ற பெயரில் ஒரு நிலையான வருமானம் அவர்களுக்கு மாதந்தோறும் வந்து கொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தான் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதுதான் தேசிய பென்ஷன் திட்டம்.இந்த திட்டம் அரசின் ஆதரவோடு செயல்பட்டு வருவதால் பலரும் பயன் பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் இப்போதிலிருந்தே நீங்கள் முதலீடு செய்தால் அதிக பலன்களை பெற முடியும். இதில் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சம் ரூபாய் வரை பென்ஷன் வாங்கலாம். அதாவது இந்த திட்டத்தில் 20 வயதில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அப்படி செய்தால் முதிர்வு காலத்தில் 40 ஆண்டுகளில் உங்களுக்கு மொத்தம் 1.91 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் வருடாந்திர பலன்கள் கணக்குதாரர் உயிருடன் இருக்கும் வரை மட்டுமே கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் மாதம் 1.43 லட்சம் என்பது 25 ஆண்டுகளுக்கு மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் இப்போது எட்டு முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கின்றது. இதில் வரிச்சலுகையும் வழங்கப்படுகின்றது.