தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்க்கும் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராமசாமி அவரது மனைவியுடன் வங்கிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது சமையலறையில் கோமதி தீக்காயங்களுடன் கிடப்பதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.