போக்குவரத்து ஊழியர்களுக்கு பரபரப்பு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலமாக நாள்தோறும் 28 இலட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றன. தற்போது பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மாநகர பேருந்துகளில் அதிக அளவில் பயணிக்கின்றன. அதே சமயம் இலவச பயணம் என்பதால் பெண்களை அவமதிக்கக் கூடாது அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று பெண்கள் கைசேகை மூலம் பஸ்ஸை நிறுத்த முயன்றால் உடனே நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சில பஸ் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்றுத்தள்ளி நிறுத்துவதால் பெண்கள் வயதானவர்கள் ஓடிச்சென்று எழுவதில் சிரமம் ஏற்படுகின்றது என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் அனைத்து பேருந்து டிப்போ கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். நிறுத்தத்தை விட்டு சற்று தூரம் தள்ளி நிறுத்தக்கூடாது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.