இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் வங்கி கணக்கு முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து பலரும் ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபடுகின்றனர். ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதனால் அவசியமில்லாமல் ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண்ணை யாரிடமும் பகிர கூடாது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது. நிலையில் ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க எண் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் எண்ணுடன் ஒரு திட்டத்தை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஆதார் கார்டில் இருக்கும் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். இதனை யுஐடிஏஐ இணையதளத்தில் சென்று பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கு இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதனை பதிவிறக்கம் செய்வதற்கு முதலில் https://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். பிறகு அதில் உள்ள மாஸ்க் ஆதார் சேவை என்ற பகுதியை கிளிக் செய்து, பேக்சா வெரிஃபிகேஷன் பதிவு செய்து ஓடிபி எண் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதனை பதிவு செய்தால் மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டை எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிக்க இந்த மாஸ்க் ஆதார் கார்டு உதவியாக இருக்கும் என்பதால் அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.