Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை: சிட்ராவில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்….!!!

குறைவான விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கடந்த 25-ம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வருகை புரிந்தார். இவர் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி துறையில் இருக்கும் சிட்ராவை பார்வையிட்டார். அவர் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இவர் திருப்பூரில் நடந்த ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் பியுஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில் ஒரே நேரத்தில் 300 சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் மெஷின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கிறது என்றார். அந்த இயந்திரம் பெரிய அளவில் செயல்படாததால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு உடனடியாக பேசினேன். அப்போது பிரதமர் ஜன் அவுஷதி திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களுக்கு மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கலாம். இதற்காக சிட்ராவிலிருந்து சானிட்டரி நாப்கின் கொள்முதல் செய்யலாம். இந்த ஆர்டர் விரைவில் வழங்கப்படும் என்றார். இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சிட்ரா இயக்குனர் பிரகாஷை டெல்லிக்கு அழைத்துள்ளார்.

அந்த அழைப்பை ஏற்று டெல்லிக்கு சென்ற பிரகாஷ் சானிட்டரி நாப்கின் உற்பத்தி குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்குப் பிறகு சிட்ரா இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது, மத்திய ஜவுளி பிரிவில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின் இருக்கிறது என்றார். இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 6 கோடி வரை சானிட்டரி நாப்கின் தயாரிக்க முடியும் என்றாலும், 50 முதல் 60 ஆயிரம் வரையிலான சானிட்டரி நாப்கின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.

அதன்பிறகு பிரதமரின் ஜன் அவுஷதி திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது எனவும், அதற்காக கடந்த வருடம் 12 கோடி நாப்கின்கள் வழங்கியதாகவும், இதைவிட அதிக அளவிலான நாப்கின்கள் நடப்பாண்டில் வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் மத்திய அரசின் ஆர்டர் கிடைத்தவுடன் சானிட்டரி நாப்கின்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், இதற்காக அதிக அளவில் உற்பத்தியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் கூறினார்.

Categories

Tech |