Categories
தேசிய செய்திகள்

ஆண் குழந்தை மோகத்தால்…. மகளையே கொலை செய்யத் துணிந்த கொடூர தந்தை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் என்ற பகுதியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருக்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராதிகாவுக்கு 2-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஸ்வர ராவ்க்கு ஆண் குழந்தை மீது அதிக அளவில் ஆசை இருந்துள்ளது.

இதன் காரணமாக ராதிகாவுடன், வெங்கடேஸ்வர ராவ் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து வெங்கடேஸ்வர ராவ் திடீரென வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராதிகா தன்னுடைய கணவரிடம் இருந்து மகளை எப்படியோ போராடி காப்பாற்றி விட்டார். இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஸ்வர ராவ்வை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |