ஜெர்மனியின் எல்மாவ்நகரில் ஜி 7 மாநாடு 2 தினங்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனிக்கு சென்றார்.
இதையடுத்து அம்மாநாட்டில் பங்கேற்ற மோடி, பின் ஐக்கியஅரபு அமீரகத்திற்கு இன்று புறப்படுகிறார். அதன்பின் அங்கு ஐக்கியஅரபு அமீரக அதிபர் ஷேக்முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து பேச இருக்கிறார். அதனை தொடர்ந்து மோடி, ஐக்கியஅரபு அமீரகத்தின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.