தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களிடம் ₹500 அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..