Categories
சினிமா

நடிகர் ஷாருக்கானை இறுக்கமாக கட்டிப்பிடித்த…. பிரபல தொகுப்பாளினி…. காரணம் என்ன தெரியுமா.?…..!!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், VJ-வாக இருந்து, பல ரசிகர்களுக்கு பேவரைட்டாக திகழ்பவர், திவ்ய தர்ஷினி என்கிற டிடி. மேலும் தொகுப்பாளினி டிடி, ஆர்.ஜேவாக இருந்து, பின் விஜேவாகவும், மாடலாகவும் இருந்தார். இதையடுத்து இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே  உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகரான ஷாருக்கானை, டிடி  இறுக்கமாக கட்டிப் பிடித்து அவரிடம் முக்கிய விஷயம் ஒன்றை சொன்னதான விஜய் டிவி டிடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து டிடி, நடிகர் ஷாருக்கானை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தினை, தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலும் அவரை  இறுக்கி கட்டிபிடித்து, தான் சொன்னதையும் கூறியுள்ளார். ‘இவ்வளவு வருடங்கள் நீங்கள் எங்களுக்கு கொடுத்தது பல நினைவுகள் எனவும்,  மேலும் நீங்கள் எங்களுக்கு கொடுத்த மகிழ்ச்சி அளவில்லாதது. இவ்வாறு அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர்’ என்று கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஷாருக்கான் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள் ஆகியுள்ளது. மேலும் இது குறித்து டிடி தன்னுடைய மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளதாவது, உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக தினமும் நான் பிரார்த்தனை செய்வேன். மேலும் இத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் இந்த நேரத்தில், இப் புகைப்படத்தை வெளியிடுவதற்கு நான் எப்போதும் மகிழ்ச்சி அடைவதாகவும்  தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |