Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூமி பூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

உபரி நீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது போரூர் ஏரி. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின்  வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது.  இப்பகுதி  ஏரியின் குறுக்கே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது  மழைத்தண்ணீர் பரணிபுத்தூர், பட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சூழ்ந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மனோகரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பூஜையை தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |