செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் 17.10.1971-ல் தொடங்கிய இயக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக மாயத்தேவர் நின்று வெற்றி பெற்றார். சட்டமன்றத்திற்கு கொங்கு பகுதியில் அரங்கநாதன் வெற்றி பெற்றார். முதல் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அரங்கநாதன் அவர்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்குவங்கி என்பது கொங்கு மண்டலதோடு, அதேபோல பெரும்பான்மையாக இருக்கின்ற வன்னியர் சமுதாய மக்களோடு, தென் பகுதியில் இருக்கின்ற தேவர் சமுதாய வாக்குகளும் முழுமையாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விழுந்தது.
அதோடு மட்டுமல்லாமல் சிறுபான்மை சமுதாயமாக இருக்க கூடிய மக்களின் வாக்குகளும், ஆதிதிராவிட மக்களும், அருந்ததி மக்களும் புரட்சித்தலைவர் மதுரை வீரன் படத்தை பார்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக தலைவரை ஏற்றுக்கொண்டவர்கள், குருவிக்காரர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒட்டுமொத்தமாக அண்ணா திராவிட முன்னேற்றகழகத்தை இன்னும் இரட்டை இலையை பச்சை குத்தி இருக்கிற சாமானியர்கள், எளியவர்கள், தூயவர்கள், பண்பாளர்கள் இவர்கள் எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வாக்குவங்கிகள். இதிலே சாதி, சமய, இன, வேறுபாடு கிடையாது.
பல தேர்தல்களை நீங்கள் எடுத்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்களானால்…. எல்லா தேர்தல்களிலும் இந்த வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல் அம்மா காலத்திலும், புரட்சித்தலைவர் காலத்திலும், அம்மாவின் காலத்திற்குப் பிறகும் வெற்றி பெற்று இருக்கிறோம். இப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மாவட்ட கழக செயலாளருடைய கூட்டம், அதற்குப் பிறகு பொதுக்குழு ஏறத்தாழ 2665 பேர் அதில் பங்கேற்றக் கூடிய பொதுக்குழு இதுதான் உண்மையானது. கூட்டத்தை கூட்டுகின்ற கலை என்பது அண்ணனுக்கும் தெரியும், எல்லாருக்கும் தெரியும்.
அதற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் அடையாளம் கொடுக்கலாம். அது வந்து நீங்கள் உறுப்பினர் கார்டு செக் பண்ணியா வரிசையில் நிற்க வைக்கப் போகிறீர்கள் ? யார் வேண்டுமானாலும் நிற்க வைக்கலாம். அந்த மக்களை நாம் அன்போடு அழைத்தால் வருவார்கள், இது அன்புள்ள மக்கள், பாசமுள்ள மக்கள், தென் பகுதி மக்கள் வந்து எப்போதுமே அன்புக்கும், பண்புக்கும், பாசத்திற்கும் பணிந்து எப்போதுமே வந்து உடன்பட்டு ஆதரவளிக்கக் கூடிய பண்புள்ள மக்கள் என தெரிவித்தார்.