அமெரிக்க நாட்டில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் 31 வயதுடைய சத்நாம் சிங் என்ற இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில், இவர் தன் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் நின்ற வாகனத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, ஒரு மர்ம நபர் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். தற்போது, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.