Categories
சினிமா தமிழ் சினிமா

“இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல பாடகி”….. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்…!!!!

பிரபல பாடகி மஞ்சரி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மலையாள சினிமா உலகில் பல பாடல்களை பாடியுள்ளார் பாடகி மஞ்சரி. இவர் தமிழில் கஸ்தூரிமான் திரைப்படத்தில் போர்க்களம் என்ற பாடல், தலைநகரம் திரைப்படத்தில் ஏதோ நினைக்கிறேன் உள்ளிட்ட பல பாடல்களை பாடி இருக்கின்றார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் சென்ற 2009ஆம் வருடம் விவேக் என்பவரை திருமணம் செய்தார். பின் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே அவரை விட்டு பிரிந்தார். இந்த நிலையில் தனது பள்ளி நண்பரான ஜெரின் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கின்றார். இருவருக்கும் சென்ற 24ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |