மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி பசும்பொன் நகர் பகுதியில் சங்கர நாராயணன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாமாதவி(54) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மோட்டார்சைக்கிளில் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது மதுரையை நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் சங்கரநாராயணன், உமாதேவி ஆகிய 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் கணவன், மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.