Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு…. அரசின் முடிவு என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 17,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் பாதித்த 15,208 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 94,420 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவால் பாதித்த 20 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |